சூர்யாவின் உறவினரான எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ், ஞானவேல்ராஜா ஆகியோர் பங்குதாரராக இருந்த பட நிறுவனம் ஸ்டுடியோக்ரீன். சில வருடங்களுக்கு முன் இந்த நிறுவனத்திலிருந்து எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் இருவரும் விலகி ட்ரீம்வாரியர் மற்றும் 'பொட்டென்ஷியல் ஸ்டூடியோஸ்' என்ற நிறுவனங்களைத் தொடங்கினர்.
இவர்கள் வெளியேறிய ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் ஞானவேல்ராஜாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
ஞானவேல்ராஜாவின் சகோதரியைத்தான் எஸ்.ஆர்.பிரகாஷ் திருமணம் செய்துள்ளார். அந்தளவுக்கு நெருங்கிய உறவினர்களாக இருந்தும் படத்தயாரிப்புத் தொழிலில் தனித்தனியாக இயங்கி வருகின்றனர்.
இந்நிலையில் 'பொட்டென்ஷியல் ஸ்டூடியோஸ்' நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் தயாரித்துள்ள மூன்றாவது படம் படம் 'மான்ஸ்டர்'.
'ஒரு நாள் கூத்து' படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர், கருணாகரன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படம் இம்மாதம் 17-ஆம் தேதி வெளியாகிறது.
இதே தேதியில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள மிஸ்டர்.லோக்கல் படமும் வெளியாகிறது. மிஸ்டர்.லோக்கல் படம் வெளியாகும் அதே தேதியில் மான்ஸ்டர் படமும் வெளியாவதால் சுமார் 200 தியேட்டர்கள் மிஸ்டர்.லோக்கல் படத்துக்கு குறைய வாய்ப்பிருக்கிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment