திருமண ஆசைகாட்டி 17 ஆண்களை பெண் ஒருவர் ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் சேலம் மாவட்டத்தில் நடந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் பழைய தங்கம், வைர நகைகளை ஏலத்தில் எடுத்து வியாபாரம் செய்து வரும் ஒருவர்.
இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணத்திற்காக தமிழ் மேட்ரிமோனி இணையத்தளத்தில் தன்னைப் பற்றிய விவரங்களை பதிவிட்டுள்ளார்.
இதனைப் பார்த்த சேலத்தை சேர்ந்த மேகலா என்பவர், அவரைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதனையடுத்து இருவரும் தங்களுடைய செல்போன் எங்களை மாற்றிக்கொண்டு தினமும் பேச ஆரம்பித்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் மேகலா மீது பாலமுருகனுக்கு காதல் மலர்ந்துள்ளது. சென்னையில் வேலை செய்துவருவதாக மேகலா கூறியதைக் கேட்டு அவரை சந்திப்பதற்காக பாலமுருகன் சென்னை சென்றுள்ளார்.
தனது குடும்பக் கஷ்டங்களைக் கூறி லட்சக்கணக்கில் பணம், தங்க, வைர நகைகள், துணிகள் என பலமுருகனிடமிருந்து மேகலா பறிக்க ஆரம்பித்துள்ளார்.
இதேசமயம் அவருடைய மாமன் கணபதியுடன், மேகலா நெருக்கமுடன் இருப்பதாக பாலமுருகனின் நண்பர்கள் கூறியுள்ளனர்.
இதனைக் கேள்விப்பட்டு சந்தேகமடைந்த பாலமுருகன், மேகலா குறித்த விசாரணையில் இறங்கியுள்ளார். அதில் பல அதிர்ச்சி தகவல்கள் பலமுருகனுக்கு கிடைத்துள்ளன.
கரூர் சிவக்கொழுந்து, பல்லடம் ஆனந்த், ஈரோடு குணசேகர், கோவை ஸ்ரீதர் திருப்பதி, கணபதி உள்ளிட்ட 17 பேருடன் மேகலா உல்லாசமாக ஊர் சுற்றி வந்துள்ளார். அலுவலக ஊழியர்களுடன் பயிற்சிக்கு செல்வதாகக் கூறிவிட்டு ஊட்டி மற்றும் சென்னையிலும் அறை எடுத்துத் தங்கியிருந்துள்ளார்.
இதுகுறித்து மேகலாவிடம் கேட்டதற்கு, ”ஆம் உண்மை தான், உன்னால் முடிஞ்சதை பார்த்துக்கோ” எனக்கூறி பலமுருகனுக்கு இன்னும் அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.
இது குறித்து பிரபலமான வார இதழ் ஒன்றுக்கு கண்ணீர் மல்க பேட்டியளித்திருக்கும் பாலமுருகன், மேகலாவின் பேச்சை நம்பி இதுவரை 35 இலட்சத்திற்கும் அதிகம் செலவு செய்திருப்பதாக கூறியுள்ளார்.
பொலிஸாரிடம் முறைப்பாடு கொடுத்தால், பாதிக்கப்பட்ட 17 பேரையும் அழைத்து வந்தால் மட்டுமே வழக்குப் பதியப்படும் எனக் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment