மினுவாங்கொட வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களில் 15 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பல இடங்களில் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவியது. இதனையடுத்து முஸ்லிம் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.
இதன் காரணமாக நீர்கொழும்பு உள்ளிட்ட வடமேல் மாகாணத்தின் பல பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறியிருந்தன.
குறிப்பாக மினுவாங்கொடையில் முஸ்லிம் மக்களின் சொத்துக்களுக்கு கடும் சேதம் விளைவிக்கப்பட்டதுடன் பல வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியிருந்தன. இதனையடுத்து இந்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றச்சாட்டில் பலர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment