சிறைக்குள் கைதிகளுக்கடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரேசில் நாட்டின், வடக்கு மாநிலமான அமேசானாஸின்(Amazonas) மானாஸ் (manaus) பகுதியில் அனிசியோ ஜோபிம் (anisio jobim)என்ற சிறைச்சாலை அமைந்துள்ளது.
இந்த சிறையில் நேற்றுத் திடீரென கைதிகளிடையே கலவரம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த சிறைக் காவலர்கள், கைதிகளுடன் போராடி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
எனினும், கலவரத்தில் 15 கைதிகள் உயிரிழந்தனர். அசம்பாவிதத்தைத் தவிர்க்க உலங்கு வானூர்திகள் மூலம் பொலிஸார் சிறையை கண்காணித்து வருகின்றனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு இதே சிறையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட கலவரத்தில், 56 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment