முக்கிய குற்றவாளிகள் 13 பேர் பூசா சிறைச்சாலைக்கு மாற்றம்

பாதாள உலகம் மற்றும் போதைப் பொருள் வியாபாரம் போன்ற நடவடிக்கைகளுடன் தொடர்புடைய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை பெற்றுள்ளவர்களும், ஆயுள் தண்டனை பெற்றுள்ளவர்களும் பூஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, குற்றவாளிகள் 13 பேர் நேற்று (25) வெலிக்கடை மற்றும் மஹர சிறைச்சாலைகளிலிருந்து பூஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்கள வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
பூஸ்ஸ சிறைச்சாலையில் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை அதிக பாதுகாப்புடன் கூடியதாக தடுத்து வைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சர் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை தலைமையக பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இந்த சிறைச்சாலைக்கு நாளை முதல் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment