மும்பை அணி வெற்றி பெற 132 ரன்கள் இலக்கு

ஐபிஎல் தொடரின் குவாலிவையர்-1 சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் டோனி பேட்டிங் தேர்வு செய்தார்.

இதையடுத்து, சென்னை அணியின் தொடக்க  ஆட்டக்காரர்களாக வாட்சன், டு பிளிசிஸ் களமிறங்கினர்.

ஆட்டத்தின் தொடக்கத்தில் மும்பை அணியினரின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. இதனால் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தன.
டு பிளசிஸ் 6 ரன்னிலும், ரெய்னா 5 ரன்னிலும், வாட்சன் 10 ரன்னிலும் அவுட்டாகினர். தொடர்ந்து இறங்கிய முரளி விஜய்க்கு, அம்பதி ராயுடு ஒத்துழைப்பு கொடுத்தார். ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிய முரளி விஜய் 26 ரன்னில் வெளியேறினார். அப்போது அணியின் எண்ணிக்கை 4 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்து கேப்டன் டோனி இறங்கினார். இருவரும் பவுண்டரி, சிக்சராக விளாசினர். இறுதியில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 131 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, மும்பை அணிக்கு 132 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி. டோனி 37 ரன்னுடனும், ராயுடு 42 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

மும்பை அணி சார்பில் ராகுல் சாஹர் 2 விக்கெட்டும், குருணால் பாண்டியா, ஜெயந்த் யாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment