பிரேசில் நாட்டில் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பாரா மாகாணத்தில் உள்ள பெலம் நகரத்தில் உள்ள பார் ஒன்றில் நேற்று மாலை துப்பாக்கியுடன் மர்ம நபர்கள் புகுந்து மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மதுபான விடுதியில் இருந்தவர்கள் மீது, குறித்த நபர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் திடீரென சரமாரியாக சுட்டுவிட்டு தப்பியோடி விட்டனர். இதில் 6 பெண்கள் உட்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் விரைந்து சென்ற பொலிஸார் காயமடைந்தவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
துப்பாக்கி சூட்டுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. தாக்குதல் நடைபெற்ற விடுதியில் போதைப் பொருட்கள் விற்பனை தாராளமாக நடைபெறுகிறது. எனவே, போதைப்பொருள் விற்பனை செய்வதில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment