நாட்டின் தேசிய பாதுகாப்பிற்காக பதினொரு அம்சங்கள் அடங்கிய கோரிக்கையொன்றினை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முன்வைத்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பதினொரு அம்சங்கள் அடங்கிய கோரிக்கையொன்றை தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வை நாடாளுமன்ற குழுவின் தலைவர் மலின் ஜயதிலக்கவிடம் சமர்ப்பித்துள்ளோம்.
இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையில் சகோதரத்துவத்தை அதிகரித்துக்கொண்டு புதிய பயங்கரவாதம் மற்றும் அடிப்படைவாதத்தை முற்றாக இல்லாதொழிப்பதற்கு ஏற்றவகையிலான தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான சட்டதிட்டங்களை நாடாளுமன்றம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த கோரிக்கையை கையளித்துள்ளோம்.
ஆகவே இது தொடர்பாக விரைவாக ஆராய்ந்து இரண்டு மாதங்களுக்குள் அனைத்து சட்சிகளின் ஆலோசனைகளை பெற்று சட்டமியற்ற நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்துள்ளோம்“ என குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment