இஸ்லாத்தின் பெயரை வைத்துக்கொண்டு ஒருசிலர் செய்த பயங்கரவாதத் தாக்குதல், நாட்டில் உள்ள 22 இலட்சம் முஸ்லிம்களையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் நேற்று (10) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
பள்ளிவாசல்களில் வாள்கள் மற்றும் கத்திகள் மீட்கப்படுவதாக ஊடகங்களில் காண்பிக்கின்றனர். திகனவில் 30 பள்ளிவாசல்கள் அடித்து நொருக்கப்பட்டபோது பள்ளிவாசல்களில் ஆயுதங்களை வைத்திருந்தவர்கள் அவற்றை எடுத்து யாரின் மீதாவது தாக்குதல்களை நடத்தினார்களா? பத்துப்பேர் செய்த பாவத்தை 22 இலட்சம் பேர் மீது திணிக்காதீர்கள் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் சகலருக்கும் நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன். குறிப்பாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு நன்றிகளைக் கூறுகின்றேன். உடனடியாக செயற்பட்ட முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கும் நன்றிகளைக் கூறிக்கொள்கின்றேன் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment