புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Galaxy A80 இனை அறிமுகம் செய்துள்ளது சாம்சுங் நிறுவனம்.
இந்தக் கைப்பேசி 6.7 அங்குல அளவுடையதும், 1080×2400 Pixel Resolution உடையதுமான Super AMOLED தொடுதிரையைக் கொண்டுள்ளது.
இதனுடன் Octa Core (2.2GHz Dual + 1.8GHz Hexa) Processor, பிரதான நினைவகமாக 8 GB RAM
மற்றும் 128 GB சேமிப்பு நினைவகம் என்பவற்றையும் உள்ளடக்கியுள்ளது.
முதன் முறையாக 3D Depth தொழில்நுட்பத்தைக் கொண்ட 48 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, நீடித்து உழைக்கக்கூடிய 3,700mAh மின்கலமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
Android 9.0 (Pie) இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக இருக்கும் இக் கைப்பேசியின் திரையில் Fingerprint தொழில்நுட்பம் தரப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment