பலங்கொட, கிரிமொட்டிதென்ன பகுதியில் உள்ள வீடொன்றை சோதனையிட்ட போது நாடாளுமன்றத்திற்கு நுழைவதற்கான வீதி வரைபடம் ஒன்று, பாராளுமன்றத்திற்கு நுழைவதற்கான அனுமதிப்பத்திரங்கள் ஆறு மற்றும் கெப் ரக வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பலங்கொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது குறித்த வீட்டில் இருந்து லும் டெப் ஒன்றும், 3 தொலைபேசிகள், 13 சிம் கார்ட்கள், ரி 56 ரக தோட்டக்கள் இரண்டு மற்றும் கெரடிட் கார்ட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கெப் வாகனத்தின் உரிமையாளர் அம்பாறை பகுதியை சேர்ந்த 26 வயதுடையவர் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் கொள்ளுபிட்டியவில் உள்ள சிற்றூண்டிசாலை ஒன்றில் கடமையாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment