அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார்.
இலங்கையில் நடந்த குண்டு வெடிப்புகளில் கொல்லப்பட்டவர்களுக்காக இதன்போது, அமெரிக்க ஜனாதிபதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த அமெரிக்கா உதவும் என்றும் அவர் இலங்கைப் பிரதமரிடம், உறுதியளித்துள்ளார்.
குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த இலங்கைக்கு அமெரிக்கா உதவும் என்று அமெரிக்க ஜனாதிபதி கூறினார். தீவிரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போரில் தமது அர்ப்பணிப்பைத் தலைவர்கள் மீள உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரினார்
இந்தத் தகவலை வெள்ளை மாளிகையின் பிரதி ஊடகச் செயலர் ஹோகன் கிட்லி தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment