கணவரின் துன்புறுத்தல் தாங்காது வேறு நாடு சென்று மறுமணம் முடித்த பெண் அங்கும் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்தச் சம்பவம் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் நடந்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகரை பகுதியைச் சேர்ந்தவர் டினா. இவருக்கு திருமணமாகி கணவருடன் வாழ்ந்து வந்த நிலையில் கணவர், டினாவை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்ததாகத் தெரிகிறது.
இதனால் வெறுத்து போன டினா, கணவரைப் பிரிந்து பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளார்.
அங்கு சுலேமான் என்ற இளைஞரை அவர் திருமண செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையில் சுலேமான் டினாவை கட்டாயப்படுத்தி தனது வீட்டில் அடைத்து வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், டினாவை இந்தியாவுக்கு அழைத்து வர பாகிஸ்தான் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய வெளியுறவு அலுவலகம் கோரிக்கை வைத்தது.
ஆனால் இஸ்லாமாபாத்தில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளது.
0 comments:
Post a Comment