ஊடகவியலாளர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்கள் தமக்கான ஊடக உபகரணங்களை கொள்வனவு செய்து கொள்ளவும் ஊடக உபகரணங்களை தரம் உயர்த்திக் கொள்ளவும் வெகுஜன ஊடக அமைச்சு 'மாத்ய அருண' விசேட கடன் திட்டத்தின் கீழ் வட்டி இல்லா கடன் வழங்கப்படவுள்ளது.
அறுபது வயதுக்கு உட்பட்ட மூன்று வருடகால சேவையை பூர்த்தி செய்தவர்களுக்கு ஊடக உபகரணங்களை கொள்வனவு செய்ய மூன்று லட்சம் ரூபாவும் ஊடக உபகரணங்களை தரம் உயர்த்திக்கொள்ள ஒன்றரை இலட்சம் ரூபாவும் இதன்கீழ் கடன் வழங்கப்படவுள்ளது.
விண்ணப்பங்கள் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் பணிப்பாளர், ஊடகம் வெகுஜன ஊடக அமைச்சு, இலக்கம் 163,கிருலப்பனை மாவத்தை இகொழும்பு 05. என்ற முகவரிக்கு பதிவு தபாலில் அனுப்பப்படவேண்டும்.
0 comments:
Post a Comment