தாய் மண்ணை முத்தமிட வேண்டும் தமிழ் மண்ணை சுற்றி வரவேண்டும். தாய் நாட்டைப் பிாிந்து வாழ்கின்ற எமக்கு நெருப்பாய் நினைவுகள் சுடுகின்றது.
தமிழீழ மக்களின் வலிகளையும் ஏக்கங்களையும் வெளிப்படுத்தும் விதமாக தாய் மண்ணை முத்தமிட வேண்டும் என்கிற வசிகரன் (Norway) அவர்கள் எழுதிய குருதி வலிகள் எனும் இசைதட்டில் வெளியான தமிழீழ எழுச்சிப்பாடலை கனடாவில் இருந்து சுப்பர் சிங்கர் போட்டியில் பங்குபற்றிய சின்மயி அவர்கள் சூப்பர் சிங்கர் மேடையில் பாடி அசத்தியிருக்கிறார்.
இதன் மூலம் தமிழீழ மக்களின் வலிகளையும் ஏக்கங்களையும் உலகெங்கும்வாழும் தமிழ் மக்கள் சின்மயின் குரலின் உணரக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
குறிப்பாக, தாய் நாட்டை விட்டு வாழும் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் குறித்த பாடலின் வாிகளை கேட்டு அப்பாடலில் லயித்தனர்.
பாடலின் ஒவ்வொரு வாியும் ஆழமான மெய்யுணர்வுட்டும் விதமாக அமைகின்றது.
0 comments:
Post a Comment