தாயகம் அறக்கொடை நிதியத்தின் அங்குரார்ப்பண வைபவம் யாழ்.பெருமாள் கோவில் லக்சுமி நாராயண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகம் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு நிதியத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் வறுமைக் கோட்டுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் மற்றும் பெண்தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக பசுமாடுகளும் வழங்கி வைக்கப்பட்டது.
நல்லூர் ஆதீனக் குருமுதல்வரின் ஆசியுடன் ஆரம்பமாகிய இந்த நிகழ்வில் நிதியத்தின் தலைவரான வீ. சிறிதரன் தம்பதிகள், யாழ் வர்த்தக சங்கத் தலைவர் உள்ளிட்ட வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment