தமிழகம் நோக்கி புயல் ஒன்று வரவிருக்கிறது. என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு நிலைய அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக அந் நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இலங்கை வழியாகத் தமிழகம் நோக்கி அடுத்த வாரத்தில் இந்தப் புயல் வரவிருப்பதால், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழைக்கு அதிகம் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. அது அங்கிருந்து நகர்ந்து 28 ஆம் திகதி பிற்பகலில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இலங்கை நோக்கி நகருகிறது.
பின்னர், இலங்கை வழியாக தமிழகத்துக்கு புயலாக வருவதற்கான வாய்ப்புள்ளது. தற்போதையை நிலைப்படி தமிழகத்தை நோக்கியும், மியான்மர் பகுதியை நோக்கியும் 2 சூழல்களில் அதன் போக்கு இருக்கிறது.
25 ஆம் திகதிக்கு பின்னர் அதன் நிலைப்பாடு குறித்து உறுதியாக சொல்ல முடியும். தமிழகத்தை நோக்கி புயல் வந்தால், தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது.
0 comments:
Post a Comment