உயிா்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் உயிாிழந்த பொதுமக்களின் ஆத்ம சாந்திக்காய் நல்லை ஆதீனம் மற்றும் நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூசை வழிபாடு மற்றும் ஆத்ம சாந்தி யாகம் இடம்பெற்றது.
இன்று காலை 10 மணிக்கு நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தில் ஒன்றுகூடிய சா்வமத தலைவா்கள் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களுக்கான ஆத்மசாந்தி பூசை வழிபாடுகளை நடத்தினா். இதில் பொதுமக்களும் கலந்து கொண்டனா்.
இதனைத் தொடா்ந்து நல்லை ஆதீனத்தில் ஒன்றுகூடிய சா்வமதத் தலைவா்கள் மற்றும் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட மக்களின் ஆத்ம சாந்திக்கான யாகத்திலும் கலந்து கொண்டனா்.
0 comments:
Post a Comment