விவாகரத்து கேட்ட மனைவியிடம் கணவன் உருக்கம்

குழந்தை இல்லாததால் கணவனை விவாகரத்துச் செய்ய மனைவி முடிவெடுத்துள்ளார். ஆனால் தன்னுடைய மனைவி தன்னுடன் தொடர்ந்து வாழ வேண்டும் என கணவர் உருக்கமாகக் கோரிக்கை வைத்துள்ளார்.

நைஜீரியாவை சேர்ந்தவர் ஐசத் என்ற பெண்ணுக்கும், தனிம் என்பவருக்கும்  கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு குழந்தை இல்லாத நிலையில் கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் என ஐசத் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

என்னை என் கணவர் தனிம் நன்றாகக் கவனித்து கொண்டார், எனினும் அவரை என்னால்  இனியும் நேசிக்க முடியாது.

அவரை நான் காதலிக்கவில்லை, அதனால் எங்களுக்கு நடந்த திருமணத்தை இரத்துச் செய்து விவாகரத்து வழங்க வேண்டும் என நீதிமன்றில் கூறியுள்ளார்.

தனிம் கூறுகையில், நான் என் மனைவியை இன்னும் நேசிக்கிறேன், அவளை விட்டுப் பிரியாமல் சேர்ந்து வாழவே விரும்புகிறேன்.

ஐசித்தின் இந்த நிலைபாட்டை நான் மாற்றுவதற்கு நீதிமன்றம் அவகாசம் கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இது குறித்து நீதிபதி கூறுகையில், திருமண வாழ்வில் பொறுமையும், புரிதலும் தம்பதிக்கு முக்கியம், இது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுங்கள்.

ஏப்ரல் 29 ஆம் திகதிக்கு இந்த வழக்கு ஒத்தி வைக்கபடுகிறது என நீதிபதி தெரிவித்துள்ளார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment