சாலையில் சென்றவரின் சங்கிலி அறுக்கப்பட்ட சம்பவமொன்று,
கோண்டாவில் பழனியாண்டவர் ஆலயத்திற்கு அண்மையில் நேற்று அதிகாலை நடந்துள்ளது.
குறித்த ஆலயத்தின் பூசகர் சகோதரன் அதிகாலைப் பொழுதில் தனது வீட்டுக்கு அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்றுள்ளார்.
அதன் போது , நீள கைசட்டையும் , நீள காற்சட்டையும் அணிந்தவாறு ,
முகத்தை துணியால் மறைத்துக் கட்டி, தலைக்கவசம் அணிந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் ஆலயத்தின் மேற்கூரையை காட்டி ஏதோ சொல்லி உள்ளார்.
பூசகரின் சகோதரன் வாய் பேச முடியாதவர் என்பதுடன் அவருக்கு காதும் கேட்காததால் , அவர் அந்நபர் காட்டிய திசையில் பார்த்து அதனை புரிந்து கொள்ள முயற்சிதார்.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் வந்த நபர் அவரின் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் ஆலய வீதியிலும் மற்றும் ஆலயத்திற்கு அருகில் உள்ள பூசகரின் வீட்டிலும் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.ரி.வி.கமரா பதிவுகளைக் கொண்டு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment