துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு மாதங்களுக்குப் பின்னர் இரு சந்தேக நபர்கள் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேலியாகொட மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை கடவத்த மற்றும் சீதுவ பிரதேசங்களில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
46 மற்றும் 47 வயதுடைய சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைக்காக இன்று பொலிஸில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி விடுதி ஒன்றில் நபர் ஒருவர் மீது இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
0 comments:
Post a Comment