உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி எனத் தெரிவிக்கப்படும் சஹ்ரான் ஹாசீமுக்குத் தலைமைத்துவம் வழங்கிய மதகுரு ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட குறித்த மதகுருவே தாக்குதல்களை நடத்துவதற்கு சஹ்ரானுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, தெஹிவளை ஹோட்டலில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் 11 பேர் பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இச் சந்தேகநபர்களில் தெஹிவளை ஹோட்டல் தாக்குதலில் உயிரிழந்த தற்கொலைதாரியின் மனைவியும் உள்ளடங்குகின்றார் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment