விஜய் சேதுபதி சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தில் திருநங்கைகளை அவதூறு செய்யும் காட்சிகள் இருப்பதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து திருநங்கைகள் அமைப்பின் நிர்வாகிகள் ரேவதி, பிரேமா, கல்கி ஆகியோர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
விஜய் சேதுபதி நாங்கள் மதிக்கும் நல்ல நடிகர். ஆனால் சூப்பர் டீலக்ஸ் படத்தில் அவர் திருநங்கையாக நடித்த பிறகு எங்கள் மதிப்பில் இருந்து இறங்கி உள்ளார். திருநங்கைகள் குழந்தைகளை கடத்துவது போன்ற கருத்தாக்கத்தை படம் ஏற்படுத்தி உள்ளது. திருநங்கைகள் குழந்தைகள் மீது பாசம் கொண்டவர்கள். அவர்கள் ஒருபோதும் குழந்தைகளைக் கடத்துவதில்லை.
மிரட்டலுக்குப் பயந்து திருநங்கைகள் பாலியல் உறவுக்கு உட்படுவதில்லை. ஆனால் அதுபோன்ற காட்சி படத்தில் உள்ளது. திருநங்கைகளுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்பது விஞ்ஞான ரீதியான உண்மை. அப்படி இருக்கும்போது ஒரு குழந்தைக்கு தந்தையான பிறகு திருநங்கையாக மாறுவதாகக் காட்டியிருக்கிறார்கள்.
இப்படி பல வழிகளிலும் நாங்கள் படத்தில் அவமானப்படுத்தப்படுகிறோம். இதற்கு காரணமான இயக்குனரும், நடித்த விஜய் சேதுபதியும் கைது செய்யப்பட வேண்டும்-என்றனர்.
0 comments:
Post a Comment