வீழ்ந்து நொருங்கியது பேரேஷீட்

'பேரேஷீட்'  என்ற விண்வெளி ஓடம் சந்திரனில் விபத்துக்குள்ளாகி வீழ்ந்து நொருங்கியது.

சந்திரனில் ஆராய்சிகளை மேற்கொள்வதற்கும், புகைப்படங்களை எடுப்பதற்கும், பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக இஸ்ரேலால் அனுப்பப்பட்டதுதான் பேரேஷீட்.


இந்த 'பேரேஷீட்'  விண்வெளி ஓடம் சந்திரனில் இறங்குவதற்கு முன்னர்  தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரையில் மோதி விபத்துக்குள்ளாகியது.

விண்வெளி ஓடத்தின் பிரதான இயந்திரப் பகுதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே உடைந்து நொறுங்கியதாக இஸ்ரேலின் விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இதற்கு முன்னர் 3 உலகநாடுகள் தமது விண்வெளி ஓடங்களை சந்திரனில் வெற்றிகரமாக தரையிறக்கியிருந்த நிலையில், நான்காவது நாடாக இஸ்ரேலின் விண்வெளி ஓடமான “பேரேஷீட்”  சந்திரனுக்கு சென்று வெற்றிகரமாக தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையிலேயே குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இதற்கு முன்பதாக  ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் விண்வெளி ஓடங்கள் வெற்றிகரமாக சந்திரனில் தரையிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment