சேப்பாக்கத்தில் ஐ.பி.எல் கிரிக்கெட் ரசிகர்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தியதால் பரபரப்பு நிலை ஏற்பட்டது.
குறித்த பகுதியில் நாளை மறுநாள் சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப் பரீட்சை நடத்தவுள்ளன. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று ஆரம்பித்தது.
இதற்காக ரசிகர்கள் இன்று காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கூட்டம் அதிகம் ஆனதால் டிக்கெட் கவுன்டர் அருகே இருந்த தடுப்புகள் உடைந்ததால் ரசிகர்கள் கீழே விழுந்தனர்.
இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் ஐ.பி.எல் போட்டிக்கு டிக்கெட் வாங்க நின்ற கிரிக்கெட் ரசிகர்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தினர்.
பலமுறை கூறியும் சாலையில் நின்ற ரசிகர்கள் கலைந்து செல்லாததால் பொலிஸார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment