தமிழகத்தின் பல இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் வாக்குப் பதிவு பாதிக்கப்பட்டது. வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து வாக்கை செலுத்தி வருகின்றனர்.
மதுரையைத் தவிர்த்து வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைகிறது.
எனினும் பெரும்பாலான தொகுதிகளில் வாக்குப் பதிவு இயந்திரந்திரங்கள் கோளாறு ஏற்பட்டது. இதனால் வாக்குப் பதிவில் பாதிப்பு ஏற்பட்டது.
சத்தியமங்கலம், குமரியில் மூன்று இடங்களிலும் கன்னியாகுமரி மாவட்டம் திக்குறிச்சி, சுசீந்திரம், லாயம் ஆகிய இடங்கிளில் வாக்கு இயந்திரம் பழுதால் வாக்காளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment