குப்பைக்கு வைத்த தீ மரங்களுக்கு பரவியதால் பனைமரங்கள் மற்றும் ஆல மரம் என்பவை தீயில் கருகியுள்ளது.
இந்தச் சம்பவம், காரைநகர் சுயம்பு வீதியில் , காரைநகர் இந்துக்கல்லூரிக்கு முன்பாக உள்ள காணியில் நடந்துள்ளது.
குப்பைகளைக் குவித்து அதற்குத் தீ மூட்டியுள்ளனர். குறித்த தீ வேகமாக எரிந்து அருகில் இருந்த மரங்களுக்குப் பரவியது.
இதனையடுத்து மின்சார சபைக்கு அறிவித்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. காரைநகர் பிரதேச சபைக்கும் அறிவிக்கப்பட்டது. பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என தீயை கட்டுக்குள் கொண்டுவர பெரும் முயற்சி எடுத்தனர்.
மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரையில் போராடி சுமார் மூன்றரை மணித்தியால போராட்டத்தின் பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment