1995ல் முறைமாப்பிள்ளை படத்தில் அறிமுகமானவர் அருண் விஜய். பல படங்களில் ஹீரோவாக நடித்தார், ஆனால் அவரால் முன்னணி ஹீரோவாக வர முடியவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித்தின் “என்னை அறிந்தால்“ படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் கவனம் பெற்றார். தொடர்ந்து, குற்றம் 23, செக்கச்சிவந்த வானம், தடம் படங்களில் நடித்தார்.
அடுத்து அக்னிச்சிறகுகள், சாஹோ, பாக்சர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை அடுத்து அவர் தனது 25வது படத்தில் நடிக்கப்போகிறார். ஆனால் அந்த படத்தை ஒரு பிரபல இயக்குனர் இயக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அருண்விஜய், அந்த படத்தை இயக்குமாறு கவுதம் மேனனிடம் கூறியிருக்கிறார். அவரும் சம்மதம் சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment