சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பலமான கூட்டை கட்டியெழுப்புவதற்கு எதிர்பார்த்திருப்பதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சிங்கள- தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, சிறிலங்கா மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தியிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மோர்கன் ஒர்டாகஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“சிறிலங்காவும் அமெரிக்காவும் மக்களுக்கிடையிலான பரந்துபட்ட கூட்டு, ஜனநாயக கொள்கைகள் மீதான அர்ப்பணிப்பு, நிலையான, பாதுகாப்பான இந்தோ-பசுபிக் அடிப்படையில் வலுவான உறவுகளைக் கொண்டுள்ளன.
இந்தக் கூட்டு மேலும் கட்டிழுப்பப்படுவதையும், எதிர்வரும் ஆண்டின் சவால்களை தொடர்ந்து சமாளிக்கவும், நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
சிறிலங்கா மக்களுக்கு பாதுகாப்பான, செழிப்பாள புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்றும் அதில் கூறியுள்ளார்.
#America #JaffnaNews #NewsToday
0 comments:
Post a Comment