சிறிலங்காவில் தற்போது நிலவும் கடுமையான வறட்சியால், 5 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வடக்கு மாகாணமே அதிகளவில் பாதிப்புக்களைச் சந்தித்துள்ளதாக, இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
வறட்சியினால் 136,329 குடும்பங்களைச் சேர்ந்த, 529,420 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாணத்தின் பெரும் பகுதி வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, காரைநகர், வேலணை, மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவுகளில் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இங்கு 24,207 குடும்பங்களைச் சேர்ந்த, 33,488 பேர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில், 13,129 குடும்பங்களைச் சேர்ந்த 53,569 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, வறட்சியினால் களுகங்கை ஆற்றுக்குள் கடல் நீர் உட்புகுந்ததால், களுத்துறை மாவட்டத்தில், 244,065 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment