கைக்குண்டை விளையாட்டுப்பொருளென கருதி தூக்கி எறிந்ததில் சிறுவனொருவன் படுகாயமடைந்துள்ளான்.
இந்தச் சம்பவம், யாழ்ப்பாணம் புத்தூர் மேற்கு நிலாவரைப்பகுதியில் இன்று நடந்துள்ளது.
தோட்டத்திலிருந்து வரும் வழியில் வெற்றுக்காணியில் இருந்த குறித்த கைக்குண்டை எடுத்த சிறுவன் அதனை வீதியில் எறிந்த போது வெடித்தது.
அதில் படுகாயமடைந்த சிறுவன், உடனடியாக அச்சுவேலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment