மொரட்டுவ பல்கலை பொறியில் பீடத்திற்கு செல்லவிருக்கும் 2018 ம் ஆண்டு உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு ஆபாச வார்த்தைகள் பேச சொல்லி பகிடிவதை செய்த சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
குறித்த மாணவர்களை ஆபாச வார்த்தைகள் பேச சொல்லியும் அதை செய்யாதவர்களை மிரட்டியும் அந்த செயற்பாடுகள் நடைபெற்றிருப்பதாக தெரியவருகிறது.
இதிலும் குறிப்பாக இதை செய்தது வடக்கு கிழக்கை சேர்ந்த தமிழ்மாணவர்களே என்பதும் கவலைக்கிடமான விடயமாகும்.
ஏற்கனவே பேரினவாத சக்கிதகளால் தமிழ் மாணவர்களை அழிப்பதற்கான நிகழ்ச்சி நிரல்கள் முடக்கிவிடப்பட்டிருக்க தமிழ் மாணவர்களே தம்மை தாமே அழித்துக்கொள்ளும் செயற்பாடானது மனவேதனை அழிக்கிறது.
ஆகவே மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பும் பெற்றோர் மிகவும் அவதானமாகவும் இவ்வாறு கேவலமான பகிடிவதைகளில் இருந்து பிள்ளைகளை பாதுகாப்பதற்கான பொறிமுறைகளையும் உருவாக்கிக்கொள்ளுதல் சிறந்தது.
0 comments:
Post a Comment