யாழ்ப்பாணத்தில் சற்று முன்னர் மின்னல் தாக்கி மூவர் உயிரிழந்துள்ளனர்.
இந்தப் பரிதாபச் சம்பவம் உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட குப்பிளான் தெற்கில் சற்று முன்னர் நடந்துள்ளது.
சகோதரர்களான திருநாவுக்கரசு கண்ணன் (வயது-48) , கந்தசாமி மைனாவதி (வயது-52) மற்றும் ரவிக்குமார் சுதா (வயது-38) ஆகியோரே சாவடைந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் தமது புகையிலைத் தோட்டத்தில் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்துள்ளனர்.
இதன்போது, திடீரென மழை பெய்ததால், அருகிலிருந்த தென்னைமரத்துக்கு கீழ் அமைக்கப்பட்டிருந்த கொட்டகையில் ஒதுங்கியுள்ளனர்.
இதன்போது, குறித்த தென்னை மரத்தின் மீது இடி மின்னல் வீழ்ந்தது. மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment