இராட்சத கிரைண்டரில் தவறி வீழ்ந்த பெண்ணொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் மூன்சி கவுண்டியில் நடந்துள்ளது.
குறித்த பகுதியில், இறைச்சி தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு இராட்சத கிரைண்டர்களில் இறைச்சி அரைத்து, விநியோகிக்கப்படுகிறது.
இந்த தொழிற்சாலையில் பெண்கள் உள்பட ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், ஜில் கிரெனிங்கர் (வயது 35) என்ற பெண், இறைச்சி அரைக்கும் இராட்சத கிரைண்டர் அருகே நின்று வேலைபார்த்து கொண்டிருந்தார்
இதன்போது, எதிர்பாராதவிதமாக குறித்த அதற்குள் விழுந்துவிட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு சக ஊழியர்கள் வருவதற்குள், அவர் உடல் நசுங்கி இறந்துவிட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment