வவுனியா கற்குழிப்பகுதியில் ஹெரோயினுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுரா அபேயவிக்கிரம தலைமையின் கீழ் செயற்படும் புலனாய்வுப்பிரிவுடன் போதை ஒழிப்புப்பிரிவினர் இணைந்து சுற்றிவளைப்பு மேற்கொண்டனர்.
இதன்போதே 23 வயதுடைய குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபரிடமிருந்து, 510 மில்லிக்கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment