பின்னால் வந்த இளைஞரை சட்டெனத் திரும்பித் தாக்கியுள்ளார் நடிகை குஷ்பு.
இளைஞர் ஒருவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றபோதே இளைஞரைத் தாக்கியதாக குஷ்பு புகார் அளித்துள்ளார். இது குறித்துத் தெரிய வருவதாவது,
பொதுக் கூட்டத்தில் பேசிவிட்டுத், தனது காரை நோக்கி நடிகை குஷ்பு சென்றுள்ளார். அப்போது, அவருக்குப் பின்னால் திடீரென இளைஞர் ஒருவர் வந்துள்ளாராம்
சட்டெனத் திரும்பிய குஷ்பு குறித்த இளைஞரைத் தாக்கியுள்ளார்.
கர்நாடகாவிலுள்ள, மத்திய பெங்களூர் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு வாக்கு சேகரித்தவேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
0 comments:
Post a Comment