இளைஞர்கள் அதிக அளவில் வாக்கினை பதிவு செய்ய வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்களவைக்கு 2 ஆவது கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை ஆரம்பித்து இடம்பெற்று வருகிறது.
இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில், " மக்களவை தேர்தலுக்கான இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது. வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும்.
இளைஞர்கள் அதிக அளவில் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்கினைப் பதிவு செய்வார்கள் என நம்புகிறேன்". என்று குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment