கிறிஸ்தவ மதகுருக்கள் மற்றும் மௌலவிகளுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இன்றையதினம் இடம்பெற்றது.
கிளிநொச்சியைச் சேர்ந்த அருட்தந்தையர்கள் ஒன்றிணைந்து, மௌலவிகளைச் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
கிளிநொச்சி மற்றும் கனகாம்பிகைகுளம் ஆகிய இடங்களில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல்களில் சந்திப்பு நடைபெற்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதரண சூழலில் மதங்களுக்கிடையிலான வன்முறைகள் ஏற்படா வண்ணம் மதகுருக்கள் ஒற்றுமையாக செயற்படுதல், மக்களை ஒற்றுமையாக வழிநடத்தல் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபையின் வன்னிப் பிராந்திய குருமுதல்வர் அருட்பணி லூக்ஜோன், மெதடிஸ்த திருச்சபை, பப்டிஸ்த திருச்சபை AOG சபையின் குருவானவர்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment