பேருந்தில் கோழிக்குஞ்சுகளை ஏற்றிச்சென்றதால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
வவுனியாவிலிருந்து இன்று அதிகாலை மன்னார் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றிலையே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
பேருந்தின் பின்புறமாகவுள்ள ஆசனங்களில் கோழிக்குஞ்சுகள் ஏற்றிச் செல்லப்பட்டதாகவும் இதனால் பயணிகள் துர்நாற்றத்தை சுவாசிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கோழிக்குஞ்சுகளின் எச்சங்கள் பேருந்தில் விசப்பட்டு கால்களில் மிதிப்பட்ட பயணிகள் அசோகரியங்களுக்கு உள்ளாகியதுடன் முதியவர்கள் , பொதுமக்கள் ஆசனங்கள் இன்மையினால் நின்றபடியே தங்களது பிரயாணத்தைத் தொடர்ந்தனர் என்றும் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment