நாளையதினம் தேர்தல் நடைபெறவுள்ளதால் இன்று மாலைக்குள் அனைத்து ஏற்பாடுகளும் முடிவு செய்யப்படும். இவ்வாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
தமிழகத்தின் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் நாளை சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் அதிகாரி தெரிவித்ததாவது,
வாக்கு சாவடிகளைக் கவனிக்க வெப் கேமராக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் தேர்தல் நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும்போது அவதூறு ஏற்பட்டால் 1950 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம்.
பாதுகாப்பிற்காக 160 கம்பெனி துணை இராணுவ படையினர் வர வழைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4400 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டத்திலும் 2 செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் அவர்களும் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அளித்து வருகிறார்கள்..தேர்தல் ஆணையம் நடுநிலைமையோடு தான் செயல்பட்டு வருகிறது.
மதுரையை பொறுத்தவரை இரவு 8 மணி வரை வாக்குப் பதிவுகள் நடைபெறும். ஆண்டிப்பட்டித் தொகுதியில் வருமான வரித்துறை சோதனை செய்து பணம் கைப்பற்றியுள்ளனர். அதன் முழு தகவல் கிடைத்தவுடன் தெரிவிக்கப்படும்.
பதட்டமான வாக்குசாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும்.
24 மணி நேரமும் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
முதல் வாக்காளர்கள் 12 இலட்சம் பேர் உள்ளனர். அதேபோல் மாற்றுத்திறனாளிகள் 4 இலட்சத்திற்கும் அதிகமானோர் உள்ளனர் எனவே 100 வீதம் வாக்குப் பதிவு செய்ய வேண்டும் ஏதாவது ஒரு அடையாள அட்டையை வைத்து வாக்களிக்கலாம். அனைவரும் வாக்களிக்க முன்வர வேண்டும்.
0 comments:
Post a Comment