நெதேர்ன் பவர் நிறுவனத்தால் மக்கள் பாதிக்கப்பட்ட போதும் அதற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்த போதும் வாய் மூடி மௌனியாக இருந்தவர் தான் மாவை சேனாதிராசா. அவரது இத்தகைய செயற்பாடுகள் அந்த நிறுவனத்திடம் அவர் விலைபோயிரந்ததையே காட்டுவதாக கடுமையாக குற்றஞ்சுமத்தியுள்ள ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இதற்கான அனைத்து ஆதாரங்களும் தன்னிடம் இருப்பதாகவும் இது தொடர்பில் பொது மக்கள் மத்தியில் பேசுவதற்கு மாவை சேனாதிராசா விரும்பினால் தான் தயார் என்றும் தெரிவித்துள்ளார்.
யாழ் கட்டப்பிராயிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று ஊடகங்களைச் சந்தித்த சுரேஸ் பிரேமச்சந்திரன் சுன்னாகம் நீர்ப்பிரச்சனை தொடர்பில் மாவை சேனாதிராசா வெளியிட்ட கருத்துக்குப் பதிலளிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது..
வலிகாமம் வடக்கில் நொதேர்ன் மின்சார நிறுவனம் கொண்டு வரப்பட்டதும் அதற்குப் பிற்பாடு அந்த மின்சாரக் கம்பனி தனது கழிவு ஒயிலை நிலத்திற்குக் கீழ் கொண்டு சென்று நீருடன் கலந்ததால் அந்தப் பகுதியில் நீர் மாசுபட்டதும் அதனால் நீர்ப்பிரச்சனை போன்ற பல பிரச்சனைகள் ஏற்பட்டதும் இதன் காரணமாக இப் பிரச்சனைகள் தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய, மாகாண அரசுகள் குழுக்களை நியமித்து இது தொடர்பான ஆய்வுகள் செய்யப்பட்டமை எல்லோரும் அறிந்த விடயம்.
இந்த நொதேர்ன் பவர் மின்சார நிறுவனனத்தால் மக்களின் குடிநீர் மாசடைகிறது என்று கூறி நீதிமன்றத்திற்கு சென்றதுடன் அந்த நிறுவனத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடாத்தியும் இருந்தனர். இதில் வைத்தியர்கள், புத்திஐpவிகள் எனப் பல்வேறுபட்ட தரப்பினர்கள் இணைந்து போராட்டங்களை நடாத்தினார்கள் என்பதும் அனைவரும் அறிந்த விடயம் தான்.
ஆகவே இந்தப் போராட்டங்கள் நடைபெற்ற போது இந்த நொதேர்ன் பவர் நிறுவனம் யாழ்ப்பாணம் வருவதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர் பாராளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராசா அவர்கள் தான் என அப்போதே நான் கூறியிரந்தேன். இந்த நிறுவனத்தை இங்கு கொண்டு வருதற்கு கடுமையாக உழைத்திருந்தார்.
அதாவது அந்த நிறுவனத்தைக் கொண்டு வருவதற்காக சம்மந்தப்பட்ட அமைச்சருடன் பேசி அமைச்சரவைப் பத்திரங்கள் கொண்டு வருவதற்கும் அவர் உறுதுணையாக இருந்தது மாத்திரமல்லாமல் அந்த நிறுவனம் இங்கு வருவதற்கு முற்றுமுழுதாக செயற்பட்டு அந்த அமைச்சரவைப் பத்திரம் வரும் வரையில் அவரது செயற்பாடுகள் என்பன இருந்தது என்பதும் என்னால் நிரூபிக்கப்பட முடிந்த விடயங்கள்.
அது மாத்திரமல்லாமல் அந்த நேரத்தில் இவற்றை நான் கூறிய போது கூட சேனாதிராசா அவர்கள் அதற்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என்று எந்தவொரு கால கட்டத்திலும் அவர் எதிர்த்துக் கருத்துக் கூறவில்லை. ஆக இது இன்று நேற்று நான் கூறிய கருத்தில்லை. இந்த தண்ணீர்ப்பிரச்சனை ஆரம்பித்த போதே சேனாதிராசா தான் இந்த நிறுவனத்தைக் கொண்டு வந்தார் என்றும் ஆகவே அவர் இது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் கூறியிரந்தேன்.
அவ்வாறு நான் கூறியிருந்த போதிலும் கூட அவர் அது தொடர்பாக எந்தக் கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. அது மாத்திரமல்லாமல் நான் கேட்ட கேள்விகள் என்று சில கேள்விகள் இருக்கின்றது. இந்த நீர் மாசடைந்த போது யாழ்ப்பாண மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பிரத்தியேகமாக வலிகாமம் வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தி வந்தவர் என்ற அடிப்படையில் இந்த நீர் மாசடைந்ததால் மல்லாகம், தெல்லிப்பழை, சுன்னாகம் போன்ற பல பிரதேசங்கள் பாதிக்கப்பட்டிருந்த போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும் இங்கு நீர் மாசுபட்டது தொடர்பாக நெதேர்ன் பவர் நிறுவனத்துடன் என்ன விடயங்களை உங்களால் பேச முடிந்தது. ஆவ்வாறு ஏதும் பேசினீர்களா என்றால் அவ்வாறு எந்தவிடயங்களும் பேசப்படவில்லை.
அதுமாத்திரமல்லாமல் இந்த நிறுவனத்தின் செயற்பாடுகள் மக்களைப் பாதிப்படையச் செய்கிறது என்பதால் மக்களுக்கு நல்ல குடி நீர் வழங்க வேண்டும் அல்லது அதற்கு நஸ்ரஈடு கொடுப்பது தொடர்பாக என்றாலும் நெதேர்ன் நிறுவனத்துடன் பேசினீர்களா என்றால் அவை குறித்தும் ஏதும் பேசப்படவில்லை. ஆனாலும் மக்கள் மிக நீண்டகாலமாக தொடர்ச்சியான போராட்டங்களை நடாத்தி வந்தார்கள். இதில் எந்தப் போராட்டத்திலாவது நீங்கள் பங்குபற்றினீர்களா என்றால் எந்தப் போராட்டத்திலும் பங்குபெற்றவும் இல்லை.
ஆகவே மொத்தத்தில் வலிகாமம் வடக்கில் நீர் மாசுபட்ட சந்தர்ப்பத்தில் முக்கிய பாராளுமன்ற உறுப்பினராக தமிழரசின் தலைவராக இருந்து செயற்பட்ட நீங்கள் ஆயிரக்கணக்கான மக்கள் நீர் மாசடைந்ததால் பாதிக்கப்பட்ட போது உங்களது செயற்பாடு எவ்வாறு இருந்தது. நீங்கள் அந்த நெதேர்ன் நிறுவனத்தைப் பாதுகாப்பது என்ற அடிப்படையில் வாய் மூடி மௌனிகளாக இருந்தீர்களா இல்லையா. அதற்கு எதிரான கருத்துக்கள் சொல்வதில் இருந்து நீங்கள் தவிர்த்துக் கொண்டிர்களா இல்லையா, அதற்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொள்ளாமல் தவிர்த்துக் கொண்டிPர்களா இல்லையா. இவை எல்லாம் என்னத்தைக் காட்டுகிறதென்றால் நீங்கள் அவர்களிடம் விலை போனதைத் தான் காட்டுகின்றது.
இது நான் உங்கள் மீது இப்பொது சொல்லுகின்ற அல்லது சுமத்தகின்ற குற்றச்சாட்டு அல்ல. இங்கு நீர் மாசடைந்த பிரச்சனை வந்த போதில் இருந்தே நான் சொல்லியிருக்கின்றென். அது மாத்திரமல்லாமல் நெதேர்ன் பவர் நிறுவனத்தைக் கொண்டு வருவதில் நீங்கள் வகித்த பங்கு என்பன தொடர்பில் எனக்கு நிச்சயமாக தெரியும். இவை தொடர்பாக என்னால் நிருபிக்க முடியும். இது தொடர்பில் வேண்டுமானால் பொது மக்கள் மத்தியில் என்னுடன் நீங்கள் பேச வேண்டுமென்றால் பேசுவதற்கும் நான் தயாராக இருக்கின்றேன்.
ஆகவே இங்கு யாரையும் பாதுகாக்க வேண்டுமென்ற அடிப்படையில் இந்த விசயங்களை நான் சொல்லவில்லை. உண்மையாகவே நீங்கள் இவ்வாறான தவறான நடவடிக்கைகளை முன்னர் மேற்கொண்டிருக்கின்றீர்கள் என்பது நிதர்சனமான உண்மை. ஆகவே நான் உங்களுக்கு எதிரான பொய்யான குற்றச்சாட்டக்களைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
இது நான் இன்று புதிதாக முன்வைத்த குற்றச்சாட்டும் இல்லை. நீர் மாசடைந்த போதே முன்வைத்த குற்றநச்சாட்டு தான். அப்போதே இந்த விடயங்கள் தொடர்பில் நான் பேசியிரக்கின்றென். ஆகவே வேண்டுமானால் அப்பொது வந்த பத்திரிகைகளில் பார்த்திருப்பிரு;களானால் இந்த விசயங்களை நீங்கள் பார்க்க முடியும்.
ஆகவே நான் புதிதாக ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் நீங்கள் கூறியது போன்று நான் நீதிமன்றத்திற்குச் சென்று நீதிமன்றத்தில் நிருபிக்க வேண்டும் அல்லது உங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுச் சொல்ல வேண்டுமென்ற அவசியமும் எனக்கில்லை. ஆகவே அவ்வாறான தேவை ஏற்படுமென்றால் அதைப்பற்றி நான் பின்னர் ஆலோசிப்பேன். ஆனால் அவ்வாறான தேவை எனக்கு இருக்கவில்லை.
ஆகவே எங்களுக்கு இரந்த விசயம் என்னவென்றால் நீங்கள் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். நீர் மாசடைந்த சந்தர்ப்பத்தில் உங்களது நடவடிக்கைகள் என்பது நெதேர்ன் நிறுவனத்தைப் பாதுகாப்பதாகவே இருந்ததே தவிர அவர்களுக்கு மேல் மக்கள் முன்வைத்த குற்றச்சாட்டக்களை நிருபித்து மக்களுக்குத் தேவையான முழுமையான நஸ்ர ஈட்டை உங்களால் பெற்றுக் கொடக்க முடியவில்லை.
இப்பொழுது கொடுக்கக் கூடிய நஸ்ர ஈடு என்பது அற்பத்தனமான ஒரு தொகை தான். ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிந்த பொழுது இப்பொது இந்த விடயத்தில் அக்கறை கொண்டவர்கள் அதுவும் வேறொரு தரப்பில் இருந்து அவர்கள் நீதிமன்றில் முன்வைத்த வழக்கு விசாரணைகளின் ஊடாகத் தான் இந்தத் தீர்ப்பு வந்திருக்கிறதே தவிர பாரர்ளுமன்ற உறுப்பினராக இருக்கக் கூடிய நீங்களோ அல்லது உங்கள் கட்சியில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கக் கூடிய ஏனையோரோ நீதிமன்றம் சென்று இதற்காக வழக்காடி நீங்கள் மக்களுக்கு அந்த நஸ்ர ஈட்டைப் பெற்றுக் கொடுத்தீர்களா என்றால் இல்லை.
ஆனால் நிச்சயமாக ரணில் விக்கிரமசிங்கவின் பதவியைக் காப்பாற்றுவதற்காக அவரைப் பாராளுமன்றத்தில் காப்பாற்றுவதற்காக நீங்கள் நடாளுமன்றம் சென்றீர்கள். ஐனநாயகத்தைக் காப்பாற்றுவது உங்கள் கடமை என்று சொன்னீர்கள். ஆகவே நாங்கள் நீதிமன்றம் சென்று ரணில் விக்கிரமசிங்கவைக் காப்பாற்றியிருக்கிறோம் என்று சொன்னீர்கள். அது எல்லாம் நல்ல விடயம் என்று நீங்கள் சொல்வது போன்று வைத்தக் கொண்டாலும் உங்களுக்கு வாக்களித்த மக்களின் குடி நீர் மாசடைந்திருக்கிறது. அவர்களுக்கு குடிப்பதற்கு நீர் இல்லை. அது ஒரு மிக மோசமான சூழல் ஏற்பட்டிருக்கின்றது. அப்பொழு நீங்கள் எங்கு போனீர்கள். அப்பொழுது இந்த நீதிமன்றம் உங்கள் கண்னுக்குத் தெரியவில்லையா.
இப்பொழுது யாரோ ஒருவர் மூலமாக அந்த மக்களுக்கு அற்ப சொற்ப நஸ்ர ஈடு கிடைத்திருக்கின்றது. அகவே நீங்கள் இந்த விசயங்கள் எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்க வேண்டிய கடமை பொறுப்பு முக்கியமாக உங்களுக்கு இருக்கிறது. உங்களுடன் சேர்த்து கூட்டமைப்பின் அங்கம் வகிக்கக் கூடிய பிரத்தியேகமாக யாழ்ப்பாண மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாரர்ளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கிறது.
ஆக நீங்கள் அந்தக் கடமை பொறுப்பில் இருந்து தவறியிருக்கிறீர்கள் என்பது மாத்திரமல்ல. அந்த மக்களுக்கு ஏற்பட்ட குடிநீர் பிரச்சனையை எந்தவிதத்திலும் கருத்திலெடுக்காமல் நீர் மாசடைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு நெதேர்ன் நிறுவனத்திற்கு ஆதரவாக இருந்தும் செயற்பட்டிருக்கின்றீர்கள். ஆகவே நீங்கள் இப்பொழுது என்னில் குறைகாணுவது நிச்சயாக அது ஒரு அர்த்தமற்றது. கேலிக்கிடமானது. இதற்கான முழுப் பொறுப்பையும் நீங்கள் தான் ஏற்க வேண்டுமென்பது தான் என்னுடைய முடிந்த முடிவு ஆகும் என்றுள்ளார்.

0 comments:
Post a Comment