முல்லைத்தீவு மாவட்டத்தின் இரு கிராமங்கள் படையினர் மற்றும் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதலுக்குட்படுத்தப்பட்டதில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் கிராமங்களான முள்ளிவளை ஹிஜ்சிராபுரம் மற்றும் முல்லைத்தீவு உண்ணாப்புலவு வரையான பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன்போது வீட்டிலுள்ள உரிமையாளர்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கையின்போது, புல்மோட்டையைச் சேர்ந்த நபர் ஒருவர் ஹிஜ்சிராபுரத்தில் தங்கி இருந்துள்ளார்.
குறித்த நபருடன், அதே கிராமத்தில் உள்ள மற்றுமொருவரும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
0 comments:
Post a Comment