ஒரே மாதிரியான பேய் கதையில் காஞ்சனா படத்தை மூன்று பாகங்களாக இயக்கி நடித்து விட்டார் ராகவா லாரன்ஸ்.
வசூல் ரீதியாக இந்த மூன்று படங்களுமே வெற்றி பெற்றன, என்றபோதும் ஒரேமாதிரி கதை என்று விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில், காஞ்சனா 3 படத்தை பார்த்த பெருவாரியான ரசிகர்கள், முந்தைய படங்களைப் போலவே உள்ளது என்று தங்களது சலிப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
காஞ்சனா 4 படத்தையும் பேய் கதையில் இயக்க திட்டமிட்டிருந்த ராகவா லாரன்ஸ், இதனால் தனது ரூட்டை மாற்றி விட்டாராம்.
அதாவது அடுத்து இயக்கும் படத்தை பேய் கதை அல்லாமல், பாம்பை மையமாகக் கொண்ட கதையில் இயக்குகிறார். இந்த படத்திற்கு கால பைரவா என்று டைட்டில் வைத்திருக்கிறாராம் லாரன்ஸ்.
0 comments:
Post a Comment