மாணவியொருவர் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்ட சம்பவம் ஒன்று யாழ்.வடமராட்சி, பகுதியில் இன்று நடந்துள்ளது.
18 வயதான மாணவியொருவரே தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீ மூட்டிக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மாணவியை மீட்ட உறவினர்கள் அவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகஅனுமதித்தனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
சிறுமியின் உடலில் 80 வீதமான எரிகாயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, குறித்த பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மூவர் இவ்வாறு தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி எரிந்துள்ளனர். அதில் இருவர் உயிரிழந்துள்ளனர். என்றும் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment