கத்தி மற்றம் கைக்கோடரியுடன் இளைஞர்கள் நால்வர் காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் நேற்று நடந்துள்ளது.
சந்தேகத்திற்கு இடமான முறையில் சிலர் நடமாடுவதாக காங்கேசன்துறை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, அங்கு வந்த பொலிஸார் அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் கூடி நின்ற நால்வரை சோதனையிட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து, 3 கத்தி, கைக்கோடரி , சுத்தியல் , ஸ்கூரு ரைவர் என்பவற்றுடன் 19 ஆயிரத்து 500 ரூபா பணமும் பொலிஸாரால் மீட்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் மல்லாகம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்கள். வழக்கை விசாரித்த நீதிவான் எதிர்வரும் 22 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டார்.
0 comments:
Post a Comment