நாட்டில் நடந்தேறிய தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களையடுத்து, இராணுவத்தினர் மற்றும் பொலிஸாருடன் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து பல பகுதிகளில், திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், வவுனியா பட்டக்காடு பகுதியில் அமைந்துள்ள முஸ்ஸிம் கிராமத்தில் இன்று காலை முதல் சுமார் ஒரு மணிநேரம் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அப் பகுதியிலுள்ள அனைத்து வீடுகளுக்குள், பொலிஸாருடன் இராணுவத்தினரும் இணைந்து அலுமாரி , கூரைப் பகுதி, அனைத்து அறைகள் , வீட்டின் வெளிப்பகுதி போன்ற அனைத்தையும் சோதனைக்குட்படுத்தியதுடன் அடையாள அட்டைப் பதிவுகளையும் மேற்கொண்டனர்.
எனினும் இச் சோதனை நடவடிக்கையின் போது எவரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment