உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான முறையில் முத்தமிட்டுக் கொண்ட ஜோடிக்கு இணையத்தில் கண்டனங்கள் குவிந்தவண்ணமுள்ளனவாம்
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு ஜோடி இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதற்காக புகைப்படம் எடுப்பதற்கு அபாயகரமான இடம் ஒன்றைத் தேர்ந்தெடுத்தது.
Kelly என்னும் இளம்பெண் நீச்சல் குளத்தின் வெளியில், கீழே விழுந்தால் எலும்பு கூட மிஞ்சாத உயரத்தில் தொங்கிக் கொண்டிருக்க, Kodyஎன்ற இளைஞர் தனது இரண்டு கைகளால் Kellyயைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்.
ஒருவர் மீது ஒருவருக்குள்ள நம்பிக்கையால், அந்த நேரத்தில் கொஞ்சமும் பதறாமல் நின்று நிதானமாக முத்தமிட்டுக் கொண்டதாகத் புகைப்படம் எடுத்தவர் தெரிவித்துள்ளார்.
அந்த புகைப்படம் வெளியானதும் அதைப் பார்த்த பலரும் ஜோடிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இவர்களைப் பார்க்கும் மற்றவர்களும், இதே போல் முயன்று ஆபத்தில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்றும் எச்சரித்துள்ளனர்.
இன்னொருவர், இந்த படம் நன்றாகத்தான் இருக்கிறது, ஆனாலும் உயிரைப் பணயம் வைத்து எடுக்கும் அளவுக்கு அது தகுதியுடையது அல்ல என்று தெரிவித்துள்ளார்.
மற்றுமொருவர், ஏன் இம்மாதிரிப் புகைப்படங்களில் பெண்கள் மட்டுமே ரிஸ்க் எடுக்கிறார்கள் என கேள்வி எழுப்ப, வெளியான வீடியோ ஒன்றைப் பார்க்கும்போது, ஆண் நண்பர்கள் இன்ஸ்டாகிராமில் போடுவதற்காக தங்கள் காதலிகளை புகைப்படம் எடுப்பதற்கு எந்த எல்லைக்கும் போவார்கள் என்றே தோன்றுகிறது.
0 comments:
Post a Comment