மறுமணம் செய்து கொண்ட பெண்ணொருவர் ஏராளமான குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.
பிரித்தானியாவை சேர்ந்த மொடலான டேனிலி லயார்ட் என்ற இளம்பெண்ணே அவர்.
இவர் மொடலாகவும், தொலைக்காட்சி பிரபலமாகவும் உள்ளார்.
ஜேமி ஒஹர என்பவருடன் வாழ்ந்து வந்த டேனிலிக்கு அர்ச்சி, ஹாரி, ஜார்ஜ், ரோனி என நான்கு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் டேனிலி தனது கணவர் ஜேமியை விவாகரத்துச் செய்தார்.
பின்னர் மைக்கேல் என்பவரை காதலித்து வந்த டேனிலி கடந்த 6ஆம் திகதி அவரை துபாயில் வைத்துத் திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து மைக்கேலுடன் சேர்ந்து ஏராளமான குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள விரும்புவதாக டேனிலி கூறியுள்ளார்.
இது குறித்து டேனிலி தெரிவிக்கையில், எனக்கு இன்னும் குழந்தைகள் பெற்று கொள்ள வேண்டும் என ஆசையாக உள்ளது.
இந்தாண்டு இறுதியிலிருந்து குழந்தை பெற முயல்வேன், விமானத்தில் மைக்கேலுடன் பயணிக்கும் போது Instant Family என்ற திரைப்படத்தை பார்த்தேன், அதில் பெற்றோர் 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பார்கள்.
அதை பார்த்து நாமும் அப்படி குழந்தைகளை தத்தெடுக்கலாமா என மைக்கேலிடம் கேட்டேன். ஆனாலும் நாம் குழந்தை பெற்று கொள்வது தான் மகிழ்ச்சி எனக் கூறியுள்ளார்.
எனக்கு அடுத்து பிறக்கும் குழந்தை பெண்ணாக இருக்க வேண்டும் என ஆசைப்படுவதாக டேனலி ஏற்கனவே கூறியது வைரலானது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment