இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளதை சர்வதேச நிதிச்சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க டொலருடனான ஒப்பீட்டில் நான்கரை சதவீதத்தால் உயர்வடைந்துள்ளது.
அரச பிணைமுறிகள் மீதான உள்நாட்டு – வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்தமை, சுற்றுலாத்துறை வருமானங்கள் உயர்ந்தமை, வெளிநாட்டிலிருந்து கிடைத்த நிதி பாய்ச்சல்கள் போன்றவை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பதற்குக் காரணமாகும்.
கடந்த ஜனவரி 1 ஆம் திகதி முதல் மார்ச் 31ஆம் திகதிவரை ரூபாவின் பெறுமதி மூன்று தசம் ஒன்பது சதவீதத்தால் அதிகரித்திருந்தது. அது நேற்று நான்கரை சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.
0 comments:
Post a Comment