பாறைக்குழியில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் இருவர், நீரில் முழ்கி உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம், இந்தியாவின், திருப்பூரில், இன்றையதினம் நடந்துள்ளது.
திருப்பூர், டி.எஸ்.ஆர்., லே - அவுட்டைச் சேர்ந்த கோகுல் (வயது-16) என்.ஆர்.கே.புரத்தைச் சேர்ந்த ஹரிஹர சேதுபதி (வயது-16) ஆகிய இரு மாணவர்களே உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கோடை விடுமுறையைக் கழிக்க குறித்த இருவரும், அதே பகுதியைச் சேர்ந்த நண்பன் சுஜித் (வயது-15) என்பவருடன், அம்மாபாளையம் நெசவாளர் காலனியில் உள்ள பாறைக்குழிக்கு குளிக்கச் சென்றுள்ளனர்.
இதன்போது, ஹரிஹரசேதுபதி, ஆழமான பகுதியில் சிக்கி கொண்டார். அவரைக் காப்பாற்ற, கோகுல் முயன்றார். ஆனால், இருவரும் தண்ணீரில் முழ்கினர். அதிர்ச்சி அடைந்த சுஜித், சத்தம் போட்டுள்ளார்.
சத்தம் கேட்டு சம்பவ இடத்துக்கு வந்த பொதுமக்கள் வந்து பார்த்தனர். இதன்போதே, இருவரும் தண்ணீரில் முழ்கி இறந்தது தெரியவந்துள்ளது.
பொலிஸார் மற்றும் தீயணைப்பு துறையினர், இரு உடல்களையும் மீட்டு, அவிநாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
உயிரிழந்த இரு மாணவர்களுமே, அவர்களது பெற்றோருக்கு ஒரே பிள்ளைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment